ஜனாதிபதிக்கு நாவலப்பிட்டியில் உற்சாக வரவேற்பு.

136

நாவலப்பிட்டிய நகருக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பொதுமக்களுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மாவட்டந்தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று நாவலப்பிட்டி ஜயதிலக்க மைதானத்திற்கு ஜனாதிபதி வருகைதந்தார். சர்வமத வழிபாட்டில் பங்கேற்ற பின்னர் மக்களை சந்தித்தார். மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவும் பங்கேற்றிருந்தார். அவருக்கு ஆதரவாகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.