தந்தையால் முடியுமானால் மகனாலும் முடியுமென சஜித்தெரிவிப்பு.

118

யார் என்ன விமர்சனம் செய்தாலும் அனைத்து குடும்பங்களுக்கும் தன்னுடைய அரசாங்கத்தின் கீழ் 20000 ரூபா வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பன்னல பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அன்றாட சம்பளம் பெறு ம் குடும்பங்களுக்கு இந்த சலுகையை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தந்தை யுத்த காலத்திலும் பாடசாலை சீருடை, உணவு போன்றவற்றை வழங்கியதாகவும் தந்தையால் முடியுமானால் மகனாலும் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.