கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று. (BREAKING NEWS)

115

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் 56 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 252 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் கைதிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் இதுவரை 338 பேரின் முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் திரு அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 196 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2350 ஆக அதிகரித்துள்ளது.