ஐக்கிய தேசிய கட்சியின் நிறத்தை மக்கள் தேசிய சக்தி பயன்படுத்துவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

128

ஐக்கிய தேசிய கட்சியின் நிறமான பச்சை நிறத்தை மக்கள் தேசிய சக்தி தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் அரசியலமைப்பின் அடிப்படையில் கட்சியின் நிறம் பச்சை எனவும் மக்கள் தேசிய சக்தியின் அரசியலமைப்பின் அடிப்படையில் அவர்களின் கட்சியின் நிறம் நீலம் எனவும் அவர் குறித்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். நீல நிறத்திற்கு பதிலாக பச்சை நிறத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களை வேண்டுமென்றே திசை திருப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனூடாக ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாரிய அளவில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் நிறத்தை, மக்கள் தேசிய சக்தி தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.